குறள் 818
பொருட்பால் (Wealth) - தீ நட்பு (Evil Friendship)
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.
பொருள்: முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.
Without a word those friends eschew Who spoil deeds which they can do.
English Meaning: Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.