குறள் 641
பொருட்பால் (Wealth) - சொல்வன்மை (Power of Speech)
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.
பொருள்: நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
The goodness called goodness of speech Is goodness which nothing can reach.
English Meaning: The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.