குறள் 628

பொருட்பால் (Wealth) - இடுக்கண் அழியாமை (Hopefulness in Trouble)

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

பொருள்: இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

Who seek not joy, deem grief norm
By sorrows do not come to harm.

English Meaning: That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).