குறள் 613

பொருட்பால் (Wealth) - ஆள்வினையுடைமை (Manly Effort)

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.

பொருள்: பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

On excellence of industry
Depends magnanimous bounty.

English Meaning: The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.