குறள் 607

பொருட்பால் (Wealth) - மடியின்மை (Unsluggishness)

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

பொருள்: சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.

The slothful lacking noble deeds
Subject themselves to scornful words.

English Meaning: Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.