குறள் 606
பொருட்பால் (Wealth) - மடியின்மை (Unsluggishness)
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.
பொருள்: நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
With all the wealth of lords of earth The slothful gain nothing of worth.
English Meaning: It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.