குறள் 573
பொருட்பால் (Wealth) - கண்ணோட்டம் (Benignity)
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்
பொருள்: பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.
Of tuneless song what is the use? Without gracious looks what are eyes?
English Meaning: Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.