குறள் 572

பொருட்பால் (Wealth) - கண்ணோட்டம் (Benignity)

கண்ணோட்டத் துள்ளது உலகியல்  அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

பொருள்: கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

World lives by looks of lovely worth
Who lack them are burdens of earth.

English Meaning: The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.