குறள் 505

பொருட்பால் (Wealth) - தெரிந்து தெளிதல் (Selection and Confidence)

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

பொருள்: (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

By the touchstone of deeds is seen
If any one is great or mean.

English Meaning: A man's deeds are the touchstone of his greatness and littleness.