குறள் 485
பொருட்பால் (Wealth) - காலம் அறிதல் (Knowing the fitting Time)
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.
பொருள்: உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
Who want to win the world sublime Wait unruffled biding their time.
English Meaning: They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.