குறள் 484
பொருட்பால் (Wealth) - காலம் அறிதல் (Knowing the fitting Time)
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்.
பொருள்: (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
Choose proper time and act and place Even the world you win with ease.
English Meaning: Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.