குறள் 435

பொருட்பால் (Wealth) - குற்றங்கடிதல் (The Correction of Faults)

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

பொருள்: குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

Who fails to guard himself from flaw
Loses his life like flame-lit straw.

English Meaning: The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.