குறள் 411
பொருட்பால் (Wealth) - கேள்வி (Hearing)
செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.
பொருள்: செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
Wealth of wealths is listening's wealth It is the best of wealths on earth.
English Meaning: Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.