குறள் 410

பொருட்பால் (Wealth) - கல்லாமை (Ignorance)

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

பொருள்: அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

Like beasts before men, dunces are
Before scholars of shining lore.

English Meaning: As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.