குறள் 347
அறத்துப்பால் (Virtue) - துறவு (Renunciation)
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு
பொருள்: யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
Grief clings on and on to those Who cling to bonds without release.
English Meaning: Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.