குறள் 346
அறத்துப்பால் (Virtue) - துறவு (Renunciation)
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்
பொருள்: உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
Who curbs the pride of I and mine Gets a world rare for gods to gain.
English Meaning: He who destroys the pride which says "I", "mine" will enter a world which is difficult even to the Gods to attain.