குறள் 287

அறத்துப்பால் (Virtue) - கள்ளாமை (The Absence of Fraud)

களவென்னும் காரறி  வாண்மை  அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

பொருள்: களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

Men of measured wisdom shun
Black art of fraud and what it won.

English Meaning: That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.