குறள் 285
அறத்துப்பால் (Virtue) - கள்ளாமை (The Absence of Fraud)
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
பொருள்: அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.
Love and Grace are not their worth Who watch to waylay dozer's wealth.
English Meaning: The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property.