குறள் 234
அறத்துப்பால் (Virtue) - புகழ் (Renown)
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு
பொருள்: நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.
From hailing gods heavens will cease To hail the men of lasting praise
English Meaning: If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.