குறள் 219
அறத்துப்பால் (Virtue) - ஒப்புரவறிதல் (Duty to Society)
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு
பொருள்: ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
The good man's poverty and grief Is want of means to give relief.
English Meaning: The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.