குறள் 165
அறத்துப்பால் (Virtue) - அழுக்காறாமை (Not Envying)
அழுக்காற உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது
பொருள்: பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
Man shall be wrecked by envy's whim Even if enemies spare him.
English Meaning: To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.