குறள் 1056
பொருட்பால் (Wealth) - இரவு (Mendicancy)
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்.
பொருள்: உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.
The pain of poverty shall die Before the free who don't deny.
English Meaning: All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.