குறள் 1027
பொருட்பால் (Wealth) - குடி செயல்வகை (The Way of Maintaining the Family)
அமரகத்து வன்கண்ணார் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை.
பொருள்: போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.
Like dauntless heroes in battle field The home-burden rests on the bold.
English Meaning: Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.