குறள் 1026

பொருட்பால் (Wealth) - குடி செயல்வகை (The Way of Maintaining the Family)

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

பொருள்: ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

Who raise their race which gave them birth
Are deemed as men of manly worth.

English Meaning: A man's true manliness consists in making himself the head and benefactor of his family.