குறள் 1023
பொருட்பால் (Wealth) - குடி செயல்வகை (The Way of Maintaining the Family)
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.
பொருள்: என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
When one resolves to raise his race Loin girt up God leads his ways.
English Meaning: The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.