Pongal 2025 | பொங்கல் 2025

Theme Flyer

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் முக்கிய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. பொங்கல் விழா நம் பள்ளி மாணவர்களின் மொழித் திறமையை வெளிப்படுத்தும் முக்கியக் களமாக விளங்கி வருகிறது.

கலைநிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும் பங்கேற்க மாணவர்களையும், பெற்றோர்களையும் அழைக்கிறோம்.

விழா விவரங்கள்:

பொங்கல் விழா நாள்: ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 2 ஆம் தேதி

நேரம்: நண்பகல் 12 மணி முதல்

இடம்:

Community Middle School, Plainsboro

Pongal 2025 | பொங்கல் 2025 போட்டிகள்

  • மழலைப் பாடல்கள் போட்டி
    • போட்டி நடைமுறை:
      • பள்ளித் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மழலைப் பாடல்கள் மட்டுமே போட்டிக்கான பாடல்கள்
      • அரும்பு, மொக்கு, மொட்டு பிரிவு மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்
      • ஒவ்வொரு மாணவரும் அதிகபட்சமாக இரண்டு மழலைப் பாடல்களைப் பாடலாம்
    • வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
      • தமிழ் உச்சரிப்பு
      • நடித்துக் காட்டுதல்
      • பாடல்களை சரளமாகப் பாடுதல்
    • Contest Materials
  • ஓவியப்போட்டி
    • போட்டி நடைமுறை:
      • மாணவர்கள் பொங்கல் சார்ந்த ஓவியம் வரைய வேண்டும்.
      • தெளிவான வண்ண ஓவியங்களை வரைய வேண்டும். (Only non-water based mediums like crayons, pencil colors, gel pens, oil pastels, marker pens, sharpies allowed )
      • ஓவியம் வரைவதற்கு A4 அளவுள்ள தாள்களை பள்ளி வழங்கும்.
      • ஓவியம் வரைவதற்கு தேவையான பிற பொருட்களை (Crayons, color pencils etc.,) பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும்.
      • ஓவியம் வரைவதற்கான கால அளவு - 60 நிமிடங்கள்.
    • வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
      • கற்பனைத்திறன் - Creativity
      • நிறங்களைப் பயன்படுத்திய விதம் - Color Usage
      • பொங்கல் பண்டிகையை பிரதிபலிக்கும் ஓவியம் - How well the drawing captures the essence of Pongal
  • மாறுவேடப் போட்டி
    • போட்டி நடைமுறை:
      • அரும்பு மற்றும் மொக்கு பிரிவு மாணவர்கள் போட்டியில் கலந்துக் கொள்ளலாம்.
      • இப்போட்டி, விழா மேடையில் நடைபெறும்.
      • மாணவர்கள், தமிழ்ப் பண்பாடுச் சார்ந்த வேடங்களை அணியலாம். தமிழர் வரலாறு சார்ந்த வேடங்கள், தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள் போன்ற தமிழ், தமிழர், தமிழ்நாடு சார்ந்த வேடங்களை மாணவர்கள் அணிய வேண்டும். இதைச் சாராத மாறுவேடங்களுக்கு அனுமதி இல்லை.
      • மதம்/கடவுள் வேடம் சார்ந்த மாறுவேடங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
      • தற்போது இருக்கும் அரசியல் தலைவர்கள்,  இந்தியாவின் பிற மாநிலத் தலைவர்கள் சார்ந்த மாறுவேடங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
    • வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
      • ஆடை - Costume
      • கற்பனைத்திறன் - Creativity
      • நடித்துக்காட்டுதல், மேடைப்பேச்சு - Performance & Speech
  • பேச்சுப் போட்டி
    • போட்டி நடைமுறை:

      கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளே போட்டிக்கான தலைப்புகள்

      அரும்பு, மொக்கு பிரிவுகள்

      • கதை சொல்லப் போகிறேன்
      • திருக்குறள் கதைகள்
      • ஆத்திசூடி கதைகள்
      • எனக்குப் பிடித்த சுற்றுலாத் தளம்
      • ⁠⁠என் கனவு

      மொட்டு பிரிவு

      • எனக்குப் பிடித்த திருக்குறள்
      • நானும் தமிழ்ப் பள்ளியும்
      • என் தமிழ் மொழி
      • எனக்குப் பிடித்த சுற்றுலாத் தளம்
      • ⁠⁠என் கனவு
      • தமிழ் - கற்றதும் பெற்றதும்

      மலர் & பூ பிரிவுகள்

      • செயற்கை நுண்ணறிவு
      • யாதும் ஊரே யாவரும் கேளிர்
      • போர் இல்லாத உலகம்
      • யாம் அறிந்த மொழிகளிலே...
      • சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம்
      • எனக்குப் பிடித்த சுற்றுலாத் தளம்
      • ⁠⁠என் கனவு
      • உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

      இந்த தலைப்புகளை தவிர வேறு எந்த தலைப்புகளுக்கும் அனுமதி இல்லை. மதம், அரசியல் சார்ந்த கருத்துக்களை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

    • வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
      • சரளமாகப் பேசுதல்
      • சிறந்தக் கருத்துக்களுடன் பேசுதல்
      • தமிழ் உச்சரிப்பு
      • தலைப்பையொட்டி பேசுதல்
  • ஆத்திசூடி போட்டி
    • போட்டி நடைமுறை:
      • நம் பள்ளி இணையத்தளத்தில் ஆத்திசூடி பாடல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொருளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. நம் பள்ளி இணையத்தளத்தை மட்டுமே மாண‌வர்கள் இந்தப் போட்டிக்கு பயன்படுத்த வேண்டும்.
      • ஆத்திசூடியில் மொத்தம் 109 பாடல்கள் உள்ளன. மாணவர்கள் இந்தப் பாடல்களை வரிசையாக‌க் கூற வேண்டும். ஒரு மாணவர் எத்தனை வேண்டுமானாலும் கூறலாம். எண்ணிக்கை முக்கியம் அல்ல.
      • ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஐந்து நிமிடங்கள் கொடுக்கப்படும்.
      • ஐந்து நிமிடங்களுக்குள் கூறப்படும் ஆத்திசூடி பாடல்களுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும்.
      • வரிசையாக ஆத்திசூடி பாடலை மட்டும் கூறினால் போதுமானது. பொருள் தேவையில்லை
      • மலர் மற்றும் பூ பிரிவு மாணவர்களுக்கு மட்டும் : நடுவர்கள் மாணவர்கள் ஒப்புவிக்கும் ஏதேனும் ஒரு சில ஆத்திசூடி பாடல்களுக்கு பொருளை கேட்பார்கள். கேட்கும் பாடலின் பொருளை கூற வேண்டும்.
       
    • வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
      • சரளமாகக் கூறுதல் ( Fluency) - 10 மதிப்பெண்கள் (அனைத்து பாடல்களுக்கும் சேர்த்து)
      • சரியாகக் கூறுதல் (Correctness) - ஒவ்வொரு ஆத்திசூடி பாடலுக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும்.
      • சரியான உச்சரிப்பு (Pronunciation) - 10 மதிப்பெண்கள் (அனைத்து பாடல்களுக்கும் சேர்த்து)
    • Contest Materials
  • தமிழ்த்தேனீப் போட்டி
    • போட்டி நடைமுறை:
      • தமிழ்த்தேனீப் போட்டியில், நம் பள்ளி மாணவர்கள் மாநில/மண்டல அளவிலும், தேசிய அளவிலும் தொடர்ந்து பல முக்கியப் பரிசுகளை வென்று வருகின்றனர். இந்தாண்டு, பொங்கல் விழாவில் நடைபெறும் தமிழ்த்தேனீப் போட்டி மூலமாக நம் பள்ளி அணிக்கான குழுவினர் தேந்தெடுக்கப்பட‌ உள்ளனர்.
      • Please note : Only words from the published list of words in our School Website will be used; No words outside the published list will be given.

           Levels in Tamil Theni

      • THENI-1  Up to 8yr age Born after 6/30/2017 Tell the word in Tamil – An image and its corresponding English word will be displayed. Students are required to identify and tell the corresponding word in Tamil.
      • THENI-2 Up to 10yr age Born after 6/30/2015 An image and its corresponding English word will be displayed. Students are to match the pictures and express the connection in a Tamil sentence.
      • THENI-3  Up to 12yr age Born after 6/30/2013 Translate the given English sentence into Tamil. Students only need to verbally express the Tamil sentence; writing is not necessary, and grammar will not be strictly evaluated.
      • THENI-4  Up to 16yr age Born after 6/30/2009 Translate the given English sentence into Tamil. Students are required to write the corresponding Tamil sentence.
       
      • THENI-5 Up to 16yr age Born after 6/30/2009 ஒரு வார்த்தை ஒரு இலட்சம் பாணியிலான வார்த்தை விளையாட்டு Find Word using Clues – In Theni-5, participants are provided with hints or clues that describe a particular word. The objective is for them to identify the word based on the information provided. The clues may encompass various aspects such as definitions, synonyms, antonyms, or contextual information related to the word.
       
    • வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
      • சரியாகக் கூறுதல் (Correctness)
      • சரியான உச்சரிப்பு (Pronunciation)
    • Contest Materials
  • குறள் தேனீப் போட்டி
    • போட்டி நடைமுறை:
      • பள்ளி இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள 75 திருக்குறள்கள் மட்டுமே போட்டிக்கான திருக்குறள்கள்.
      • குறள் தேனீ என்பது திருக்குறள்களைப் படிக்க ஊக்குவிக்கும் போட்டி ஆகும். அதனால் எண்ணிக்கை என்பது இங்கு முக்கியம் அல்ல. தமிழர்களின் மறைநூலான திருக்குறளை நம்முடைய அடுத்தத் தலைமுறைக்கு அறிமுகம் செய்வதே நம்முடைய நோக்கம்.
      • Participants are welcome to recite any number of Kurals without a minimum limit. Children, in particular, are encouraged to recite even 1 or 2 Kurals. While we highly value participation, it is worth noting that reciting a greater number of Kurals may enhance your chances of success in the competition.
      • Kindly be advised that participants have the flexibility to recite the Kurals in any order of their choosing. However, should they opt for a different sequence, it is imperative that they furnish the judges with a printed copy of the Thirukkurals in the exact order of their recitation. This will assist the judges in following the Kurals.

       

      குறள் தேனீப் போட்டி இரண்டு சுற்றுகளாக நடைபெறும்

       

      முதல் சுற்றுப் போட்டி

      • மாணவர்கள் தாங்கள் கற்ற குறள்களை வரிசையாகக் கூற வேண்டும்.
      • அதிக மதிப்பெண்க‌ள் எடுக்கும் மாணவர்கள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

      இறுதிச்சுற்றுப் போட்டி

      • ஒரு குறளின் தொடக்க எழுத்தைக் கூறி குறளைக் கூற சொல்லுதல்.
      • ஒரு குறளின் அதிகாரத்தை கொடுத்து அதற்கான திருக்குறள்களை கூறச் சொல்லுதல்
      • ஒரு குறளின் இறுதி வார்த்தையைக் கொடுத்து அதற்கான திருக்குறளை கூறச் சொல்லுதல்
      • மலர் மற்றும் பூ பிரிவு மாணவர்களுக்கு மட்டும் - குறளுக்கு பொருளைக் கூறுதல். மனப்பாடம் செய்யாமல் ஒரு குறளின் பொருளை உணர்ந்து கூறுதலுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
      • உதாரணமாக கேள்விகள் இப்படி இருக்கலாம்.
      • அகர என்னும் வார்த்தையில் தொடங்கும் குறள்
      • அறம் என்ற வார்த்தையில் முடியும் குறள்
      • கல்வி அதிகாரத்திலிருந்து ஒரு குறள்
      • நன்றி பற்றிய திருக்குறள்

       
    • வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
      • சரளமாக கூறுதல் ( Fluency)
      • சரியாக கூறுதல் (Correctness)
      • சரியான உச்சரிப்பு (Pronunciation)
    • Contest Materials
  • கலைநிகழ்ச்சிகள்
    • போட்டி நடைமுறை:

      Pongal Cultural Event Dance Performance Guidelines

      Performance Requirements:
      • Group Size: Minimum 10+ participants
      • Theme: Must be culturally authentic and related to Pongal & Tamil traditions
      • Restrictions:
        • No cinema songs allowed
        • Selection based on compelling cultural theme
        • First come, first served basis
      Recommended Dance Styles for Pongal:
      • Folk Dances:
        • Mayilaatam : Performers dress like peacocks, mimicking graceful movements
        • Karakaatam : Dancing while balancing pots on their heads
        • Kolattam : Dancers move in circular motions while striking sticks rhythmically
        • Other Tamil Folk art forms
      Parental Responsibilities:
      • Ensure proper participant preparation
      • Support children\'s cultural engagement
      • Help coordinate group participation
      Additional Cultural Considerations:
      • Performances should honor harvest festival traditions
      • Emphasize secular community spirit and cultural heritage
    • வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்:
      • All participants will be given medals. No winners will be selected for cultural events.

பிரிவுகள்

அரும்பு
மழலை நிலை மாணவர்கள்
Pre-k 1 and Pre-k2 students
மொக்கு
அடிப்படை நிலை மற்றும் வகுப்பு-1 மாணவர்கள்
Kindergarten & Grade-1 Students
மொட்டு
உயர் அடிப்படை நிலை மாணவர்கள், வகுப்பு 2,3 மாணவர்கள்
Advanced KG, Grade 2, 3 Students
மலர்
வகுப்பு 4, 5 மாணவர்கள்
Grade 4, 5 Students
பூ
வகுப்பு 6,7,8 மாணவர்கள்
Grade 6,7,8 Students

Registration is now closed for : Pongal 2025 | பொங்கல் 2025.