திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

குறள் 322

அறத்துப்பால் (Virtue) - கொல்லாமை (Not killing)

பகுத்துண்டு  பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

பொருள்: கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

Share the food and serve all lives
This is the law of all the laws.

English Meaning: The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.