திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

குறள் 127

அறத்துப்பால் (Virtue) - அடக்கமுடைமை (The Possession of Self-restraint)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

பொருள்: காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

Rein the tongue if nothing else
Or slips of tongue bring all the woes.

English Meaning: Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.