திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க – Thirukural Prints
குறள் 12
அறத்துப்பால் (Virtue) - வான் சிறப்பு (The blessing of Rain)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
பொருள்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
The rain begets the food we eat And forms a food and drink concrete.
English Meaning: Rain not only helps produce good food but is itself a form of nourishment. Rainwater enables crops to grow, fills rivers and reservoirs, and sustains the soil, directly supporting the food supply. In this sense, rain acts as both the source and sustainer of life, nourishing the earth and, by extension, all living beings. Thus, rain is as vital as the food it helps create, making it a fundamental "food" for the world.