திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க – Thirukural Prints
குறள் 1
அறத்துப்பால் (Virtue) - கடவுள் வாழ்த்து (The Praise of God)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world.
English Meaning: Just as the letter A is the foundation and starting point of the alphabet, so too is the eternal God the origin and foundation of all existence. In language, A holds a primary, essential place, without which the structure of words and language itself would be incomplete. Similarly, in the vast "alphabet" of the universe, God is the beginning—the source from which everything else flows.