திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

குறள் 100

அறத்துப்பால் (Virtue) - இனியவை கூறல் (The Utterance of Pleasant Words)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

பொருள்: இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

Leaving ripe fruits the raw he eats
Who speaks harsh words when sweet word suits.

English Meaning: Choosing to speak harsh words when kind and pleasant words are readily available is as senseless as picking and eating unripe fruit when ripe, sweet fruit is within reach.