ஆத்திசூடி (Aathichudi), 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை ஆத்திசூடி உணர்த்துகிறது.

மகர வருக்கம் - பாடல்கள்

88) ம : மனம் தடுமாறேல்
89) மா : மாற்றானுக்கு இடம் கொடேல்
90) மி : மிகைபடச் சொல்லேல்
91) மீ : மீதூண் விரும்பேல்
92) மு : முனைமுகத்து நில்லேல்
93) மூ : மூர்க்கரோடு இணங்கேல்
94) மெ : மெல்லி நல்லாள் தோள்சேர்
95) மே : மேன்மக்கள் சொல் கேள்
96) மை : மை விழியார் மனை அகல்
97) மொ : மொழிவது அற மொழி
98) மோ : மோகத்தை முனி