ஆத்திசூடி (Aathichudi), 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை ஆத்திசூடி உணர்த்துகிறது.

பகர வருக்கம் - பாடல்கள்

77) ப : பழிப்பன பகரேல்
78) பா : பாம்பொடு பழகேல்
79) பி : பிழைபடச் சொல்லேல்
80) பீ : பீடு பெற நில்
81) பு : புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82) பூ : பூமி திருத்தி உண்
83) பெ : பெரியாரைத் துணைக் கொள்
84) பே : பேதைமை அகற்று
85) பை : பையலோடு இணங்கேல்
86) பொ : பொருள்தனைப் போற்றி வாழ்
87) போ : போர்த் தொழில் புரியேல்