ஆத்திசூடி (Aathichudi), 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை ஆத்திசூடி உணர்த்துகிறது.

வகர வருக்கம் - பாடல்கள்

99) வ : வல்லமை பேசேல்
100) வா : வாது முற்கூறேல்
101) வி : வித்தை விரும்பு
102) வீ : வீடு பெற நில்
103) உ : உத்தமனாய் இரு
104) ஊ : ஊருடன் கூடி வாழ்
105) வெ : வெட்டெனப் பேசேல்
106) வே : வேண்டி வினை செயேல்
107) வை : வைகறைத் துயில் எழு
108) ஒ : ஒன்னாரைத் தேறேல்
109) ஓ : ஓரம் சொல்லேல்