88) ம : மனம் தடுமாறேல்
பொருள்: எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
English Translation: Don't vacillate.
English Meaning: Do not waver or become unsettled by anything. This emphasizes maintaining steadiness and clarity of mind.
89) மா : மாற்றானுக்கு இடம் கொடேல்
பொருள்: பகைவன் உன்னைத் துன்புறுத்தி உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே.
English Translation: Don't accommodate your enemy.
English Meaning: Do not give your enemy the chance to harm or defeat you. This emphasizes vigilance and resilience against adversaries.
90) மி : மிகைபடச் சொல்லேல்
பொருள்: சாதாரணமான விஷயத்தை அலங்கார வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
English Translation: Don't overdramatize.
English Meaning: Avoid exaggerating or sensationalizing simple matters. Keep your expression clear and grounded.
91) மீ : மீதூண் விரும்பேல்
பொருள்: மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
English Translation: Don't be a glutton.
English Meaning: Do not indulge in excessive eating. This emphasizes moderation and self-control in consumption.
92) மு : முனைமுகத்து நில்லேல்
பொருள்: நியாயமற்ற காரணங்களுக்காக போரிலோ, பிற சண்டையிலோ ஈடுபட வேண்டாம். இது நீதியற்ற போர்களில் இருந்து விலகி இருக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது.
English Translation: Don't join an unjust fight/war.
English Meaning: Never stand on the battlefield to fight for an unjust cause. This emphasizes avoiding conflicts that lack fairness or righteousness.
93) மூ : மூர்க்கரோடு இணங்கேல்
பொருள்: மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே
English Translation: Don't agree with the stubborn.
English Meaning: Avoid associating with those who are stubborn or obstinate. This emphasizes keeping distance from inflexible and unreasonable individuals.
94) மெ : மெல்லி நல்லாள் தோள்சேர்
பொருள்: பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
English Translation: Stick with your exemplary wife.
English Meaning: Remain loyal to your virtuous wife and live solely with her, without desiring others. This emphasizes fidelity and commitment in marriage.
95) மே : மேன்மக்கள் சொல் கேள்
பொருள்: நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
English Translation: Listen to the great legends.
English Meaning: Follow the guidance of virtuous elders by listening to their wise words. This emphasizes learning from the wisdom of respected individuals.
96) மை : மை விழியார் மனை அகல்
பொருள்: வஞ்சகமான கண்களை உடையவர்களிடமிருந்து விலகி இரு.
English Translation: Stay away from those with deceitful eyes.
English Meaning: Stay away from those whose eyes reveal deceit and dishonesty.
97) மொ : மொழிவது அற மொழி
பொருள்: "மொழிவது அற மொழி" என்பது தெளிவாகவும் நியாயமாகவும் பேச வேண்டும் என குறிப்பிடுகிறது. எந்தச் சொல்லைப் பேசுவது, எப்போது பேசுவது, எப்படி பேசுவது மற்றும் அதைச் சொல்லுதல் அவசியமா என்பதை முன் ஆராய்ந்து, மனதிற்கு உகந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்துகிறது.
English Translation: Speak with clarity.
English Meaning: Always speak with clarity, purpose, and righteousness. It emphasizes thoughtful communication by considering what to say, when to say it, how to say it, and whether it is necessary, ensuring that words are meaningful, appropriate, and cause no harm.
98) மோ : மோகத்தை முனி
பொருள்: நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு
English Translation: Avoid unnecessary attachments or desires
English Meaning: This encourages letting go of excessive longing for temporary or material things, teaching the value of self-control and focusing on what truly matters in life. It emphasizes simplicity and detachment from fleeting pleasures.