ஆத்திசூடி (Aathichudi), 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை ஆத்திசூடி உணர்த்துகிறது.

பகர வருக்கம் - விளக்கவுரை

77) ப : பழிப்பன பகரேல்

பொருள்: பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.

English Translation: Speak no vulgarity.

English Meaning: Do not speak lies or harsh words that elders would condemn as disgraceful. This emphasizes maintaining integrity and speaking with kindness and respect.

78) பா : பாம்பொடு பழகேல்

பொருள்: பாம்புபோலக் கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

English Translation: Keep away from the vicious.

English Meaning: Avoid associating with those who possess harmful and venomous traits, like a snake. This emphasizes steering clear of negative influences.

79) பி : பிழைபடச் சொல்லேல்

பொருள்: குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.

English Translation: Watch out for self-incrimination.

English Meaning: Do not speak in a way that could lead to accusations or blame against yourself. This emphasizes careful and thoughtful communication to avoid unintended consequences.

80) பீ : பீடு பெற நில்

பொருள்: பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்

English Translation: Follow the path of honour.

English Meaning: Maintain a virtuous and honorable position that leads to greatness. This emphasizes living with integrity and earning respect through righteous actions.

81) பு : புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

பொருள்: உன்னைப் புகழ்ந்தவரை நீயும் போற்றிவாழ்வாயாக

English Translation: Protect your benefactor.

English Meaning: Honor and support those who have praised or helped you. This emphasizes gratitude and loyalty towards your benefactors.

82) பூ : பூமி திருத்தி உண்

பொருள்: விளைநிலத்தை உழுது பயிர் செய்து உணவையும் வாழ்வையும் சம்பாதிக்க வேண்டும். அக்காலத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்ததால், இது மிக முக்கியமான கருத்தாக இருந்தது. இது அனைவரும் பயனுள்ளதாக இருக்கும் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது.

English Translation: Cultivate the land and feed.

English Meaning: Cultivate the land, grow crops, and earn your livelihood through farming. In ancient times, agriculture was a vital profession, emphasizing the importance of engaging in productive and beneficial work for everyone.

83) பெ : பெரியாரைத் துணைக் கொள்

பொருள்: அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்

English Translation: Seek help from the old and wise.

English Meaning: Rely on and maintain the support of elders who excel in wisdom and knowledge. This emphasizes valuing the guidance of experienced and wise individuals.

84) பே : பேதைமை அகற்று

பொருள்: அறியாமையைப் போக்கு

English Translation: Eradicate ignorance.

English Meaning: Eliminate ignorance by seeking knowledge and understanding. This emphasizes the importance of learning and self-awareness.

85) பை : பையலோடு இணங்கேல்

பொருள்: அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

English Translation: Do not associate with immature or ignorant individuals.

English Meaning: Avoid forming associations with immature or ignorant individuals, as their influence may lead to poor decisions. This emphasizes the importance of surrounding yourself with wise and thoughtful companions.

86) பொ : பொருள்தனைப் போற்றி வாழ்

பொருள்: பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.

English Translation: Protect and enhance your wealth.

English Meaning: Safeguard your possessions, including wealth, by avoiding unnecessary expenses. This emphasizes prudent management and the growth of resources.

87) போ : போர்த் தொழில் புரியேல்

பொருள்: போர்த் தொழில் புரியேல் என்றால் போராடும் செயல்களை ஒரு தொழிலாகவோ அல்லது வாழ்க்கையின் தேவைக்காகவோ செய்யக்கூடாது. இப் பாடல், மோதல், வன்முறை தவிர்த்து அமைதியான வாழ்க்கையை நடத்த வேண்டிய தேவையைக் குறித்து பேசுகிறது.

English Translation: Do not pursue war/fights.

English Meaning: Do not make the waging of war your occupation," meaning one should not treat conflict or fighting as a primary pursuit in life. It emphasizes living a peaceful and harmonious existence.