ஆத்திசூடி (Aathichudi), 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை ஆத்திசூடி உணர்த்துகிறது.

நகர வருக்கம் - பாடல்கள்

66) ந : நன்மை கடைப்பிடி
67) நா : நாடு ஒப்பன செய்
68) நி : நிலையில் பிரியேல்
69) நீ : நீர் விளையாடேல்
70) நு : நுண்மை நுகரேல்
71) நூ : நூல் பல கல்
72) நெ : நெற்பயிர் விளைவு செய்
73) நே : நேர்பட ஒழுகு
74) நை : நைவினை நணுகேல்
75) நொ : நொய்ய உரையேல்
76) நோ : நோய்க்கு இடம் கொடேல்