66) ந : நன்மை கடைப்பிடி
பொருள்: நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்
English Translation: Adhere to the beneficial.
English Meaning: Continue performing good deeds with determination, no matter how many obstacles arise. It emphasizes unwavering commitment to positive actions.
67) நா : நாடு ஒப்பன செய்
பொருள்: நாட்டில் உள்ள பலரும் ஏற்றுக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களைச் செய்
English Translation: Do what is acceptable to the nation.
English Meaning: Engage in actions that are widely accepted and beneficial to the people of your nation. This emphasizes contributing positively to society in ways that align with collective values and harmony.
68) நி : நிலையில் பிரியேல்
பொருள்: உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
English Translation: Don't depart from good standing.
English Meaning: Never lower yourself from your position of virtue and integrity. This emphasizes maintaining one's moral and ethical standards at all times.
69) நீ : நீர் விளையாடேல்
பொருள்: வெள்ளபெருக்கில் நீந்தி விளையாடாதே
English Translation: Do not play in dangerous waters.
English Meaning: Do not swim or play in floodwaters. This emphasizes avoiding dangerous situations that could lead to harm or fatal consequences.
70) நு : நுண்மை நுகரேல்
பொருள்: நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே
English Translation: Don't oversnack.
English Meaning: Avoid consuming excessive snacks, especially those that may harm your health. This emphasizes mindful eating and choosing healthier options to maintain well-being.
71) நூ : நூல் பல கல்
பொருள்: அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி
English Translation: Read lot of books.
English Meaning: Read a variety of books that enhance your knowledge and wisdom. This encourages continuous learning and intellectual growth.
72) நெ : நெற்பயிர் விளைவு செய்
பொருள்: நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
English Translation: Engage in agriculture.
English Meaning: Dedicate yourself to agriculture as a meaningful way of life. Focus on cultivating rice crops as your vocation, embracing it with purpose and commitment.
73) நே : நேர்பட ஒழுகு
பொருள்: ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட
English Translation: Exhibit good manners always.
English Meaning: Always uphold good conduct and walk the path of righteousness. This emphasizes living with integrity and discipline.
74) நை : நைவினை நணுகேல்
பொருள்: பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே
English Translation: Don't involve in destruction.
English Meaning: Do not engage in harmful actions that cause suffering to others. This emphasizes compassion and avoiding destructive behavior.
75) நொ : நொய்ய உரையேல்
பொருள்: பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
English Translation: Avoid the profane.
English Meaning: Avoid speaking trivial or meaningless words. This emphasizes the importance of meaningful and respectful communication.
76) நோ : நோய்க்கு இடம் கொடேல்
பொருள்: மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
English Translation: Avoid unhealthy lifestyles.
English Meaning: Avoid unhealthy lifestyles such as overeating or excessive sleep, as they can lead to illness. This emphasizes moderation and maintaining a balanced way of life.