ஆத்திசூடி (Aathichudi), 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை ஆத்திசூடி உணர்த்துகிறது.

தகர வருக்கம் - பாடல்கள்

55) த : தக்கோன் எனத் திரி
56) தா : தானமது விரும்பு
57) தி : திருமாலுக்கு அடிமை செய்
58) தீ : தீவினை அகற்று
59) து : துன்பத்திற்கு இடம் கொடேல்
60) தூ : தூக்கி வினை செய்
61) தெ : தெய்வம் இகழேல்
62) தே : தேசத்தோடு ஒட்டி வாழ்
63) தை : தையல் சொல் கேளேல்
64) தொ : தொன்மை மறவேல்
65) தோ : தோற்பன தொடரேல்