ஆத்திசூடி (Aathichudi), 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை ஆத்திசூடி உணர்த்துகிறது.

தகர வருக்கம் - விளக்கவுரை

55) த : தக்கோன் எனத் திரி

பொருள்: பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(நல்லவன், நம்பிக்கையானவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்

English Translation: Be trustworthy.

English Meaning: This means to conduct yourself in a manner that earns the praise and respect of elders, emphasizing trustworthiness and good character. It encourages living with integrity and being a positive example in society.

56) தா : தானமது விரும்பு

பொருள்: யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

English Translation: Be kind to the unfortunate.

English Meaning: The phrase encourages offering help or charity to those who ask, highlighting the virtue of generosity. It emphasizes compassion and kindness towards the less fortunate in society.

57) தி : திருமாலுக்கு அடிமை செய்

பொருள்: தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோனை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. திருமாலை வழிபட வேண்டும் என்று பொருள் கொள்ளலாம்.

English Translation: Serve Tirumal

English Meaning: Sangam literature mentions the Tamil people worshipped Māyon as the deity of the Mullai (pastoral forest) region, which is believed to refer to Tirumal. It conveys the idea of reverence and devotion to Tirumal, encouraging worship and service to Him.

58) தீ : தீவினை அகற்று

பொருள்: பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

English Translation: Don't sin.

English Meaning: Avoid committing wrongful or immoral actions; live a life of righteousness and integrity.

59) து : துன்பத்திற்கு இடம் கொடேல்

பொருள்: முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

English Translation: Do not give place to suffering

English Meaning: Do not give in to the physical discomfort that comes with effort and hard work. This phrase encourages perseverance and resilience, urging one to push through challenges without giving up.

60) தூ : தூக்கி வினை செய்

பொருள்: ஒரு வேளையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பு அச்செயலைச் செய்யத் தொடங்கவும்

English Translation: Deliberate every action.

English Meaning: Carefully analyze and understand the proper methods to complete a task before starting it. This emphasizes thoughtful planning and informed decision-making in all actions.

61) தெ : தெய்வம் இகழேல்

பொருள்: கடவுளைப் பழிக்காதே.

English Translation: Don't defame the divine.

English Meaning: Do not speak ill of or disrespect the divine. This emphasizes maintaining reverence and respect towards God or sacred beliefs.

62) தே : தேசத்தோடு ஒட்டி வாழ்

பொருள்: உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்

English Translation: Live in unison with your countrymen.

English Meaning: Live harmoniously with the people of your country, free from enmity or conflict. This emphasizes unity, peace, and mutual respect among fellow citizens.

63) தை : தையல் சொல் கேளேல்

பொருள்: 'தையல் சொல்' என்பது இதயத்தைத் தைத்துவிடும் கொடுமையான சொல் அல்லது மனதை கிழிக்கும் கொடூரச் சொல் என பொருள் கொள்ளலாம். அத்தகைய கொடுமையான சொற்களை கேட்க வேண்டாம்; அது நம்மை தீய வழியில் இட்டுச் செல்லும்.

English Translation: Don't listen to malicious speech

English Meaning: 'Thayal Sol' refers to cruel or hurtful words that pierce the heart and wound the mind. Avoid listening to such malicious speech, as it can lead you astray.

64) தொ : தொன்மை மறவேல்

பொருள்: உலகத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும், நம் தொன்மையான மொழியையும் பண்பாட்டையும் மறக்காமல், அவற்றைப் பேணியும் பாதுகாத்தும் கடைபிடிக்க வேண்டும்.

English Translation: Do not forget tradition.

English Meaning: Changes in the world are inevitable, but no matter how many changes occur, we must never forget our classical Tamil language and traditions. Instead, we should strive to preserve, protect, and uphold them.

65) தோ : தோற்பன தொடரேல்

பொருள்: ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதைத் தொடங்காதே.

English Translation: Don't compete if defeat is certain.

English Meaning: Do not start an endeavor if you are certain it will end in failure. It emphasizes the importance of assessing outcomes before committing to an action.