ஆத்திசூடி (Aathichudi), 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை ஆத்திசூடி உணர்த்துகிறது.

சகர வருக்கம் - பாடல்கள்

44) ச : சக்கர நெறி நில்
45) சா : சான்றோர் இனத்து இரு
46) சி : சித்திரம் பேசேல்
47) சீ : சீர்மை மறவேல்
48) சு : சுளிக்கச் சொல்லேல்
49) சூ : சூது விரும்பேல்
50) செ : செய்வன திருந்தச் செய்
51) சே : சேரிடம் அறிந்து சேர்
52) சை : சையெனத் திரியேல்
53) சொ : சொற் சோர்வு படேல்
54) சோ : சோம்பித் திரியேல்