44) ச : சக்கர நெறி நில்
பொருள்: சட்டங்களை பின்பற்றி, ஒழுங்கான வாழ்க்கையை வாழ வேண்டும். அப்பொழுது வாழ்க்கையில் அமைதி நிலவும்
English Translation: Obey the laws of the land.
English Meaning: Live according to the principles of righteousness and follow the laws of the land to ensure peace and justice.
45) சா : சான்றோர் இனத்து இரு
பொருள்: அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
English Translation: Associate with the noble.
English Meaning: Associate with those who are wise and virtuous, particularly elders who are filled with knowledge and good morals, as their guidance will lead to a life of wisdom and integrity.
46) சி : சித்திரம் பேசேல்
பொருள்: பொய்யான வார்த்தைகளை மெய் போலப் பேசாதே
English Translation: Stop exaggeration.
English Meaning: Do not speak false words as if they are the truth. Avoid exaggeration and speak with honesty and clarity.
47) சீ : சீர்மை மறவேல்
பொருள்: புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
English Translation: Remember to be righteous.
English Meaning: Always remember to uphold righteousness and never forget the virtuous qualities that lead to honor and praise.
48) சு : சுளிக்கச் சொல்லேல்
பொருள்: கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதீர்
English Translation: Don't hurt others feelings.
English Meaning: Do not speak in a way that causes anger or hatred in the listener. Be mindful of others' feelings and speak with kindness and respect.
49) சூ : சூது விரும்பேல்
பொருள்: ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
English Translation: Don't gamble.
English Meaning: Never indulge in gambling, as it leads to uncertainty and harm.
50) செ : செய்வன திருந்தச் செய்
பொருள்: செய்யும் செயல்களைத் தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
English Translation: Perform with perfection
English Meaning: Perform your actions flawlessly, without any mistakes or shortcomings, striving for perfection in everything you do.
51) சே : சேரிடம் அறிந்து சேர்
பொருள்: நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
English Translation: Seek out good friends.
English Meaning: Choose your friends wisely, ensuring they have good qualities and will positively influence you.
52) சை : சையெனத் திரியேல்
பொருள்: பெரியோர் 'சீ' என வெறுக்கும்படி வீணாய்த் திரியாதே
English Translation: Avoid being insulted
English Meaning: Do not engage in actions that would make elders despise you or cause you to be disrespected. Avoid behavior that leads to insult or shame.
53) சொ : சொற் சோர்வு படேல்
பொருள்: பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
English Translation: Don't show fatigue in conversation.
English Meaning: Do not speak in a way that causes offense, even unintentionally, when conversing with others. Avoid letting fatigue or frustration affect your words.
54) சோ : சோம்பித் திரியேல்
பொருள்: முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
English Translation: Don't be lazy.
English Meaning: Do not wander aimlessly or be lazy; always strive with effort and purpose.