ஆத்திசூடி (Aathichudi), 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை ஆத்திசூடி உணர்த்துகிறது.

ககர வருக்கம் - பாடல்கள்

32) க : கடிவது மற
33) கா : காப்பது விரதம்
34) கி : கிழமைப்பட வாழ்
35) கீ : கீழ்மை அகற்று
36) கு : குணமது கைவிடேல்
37) கூ : கூடிப் பிரியேல்
38) கெ : கெடுப்பது ஒழி
39) கே : கேள்வி முயல்
40) கை : கைவினை கரவேல்
41) கொ : கொள்ளை விரும்பேல்
42) கோ : கோதாட்டு ஒழி
43) கெள : கெளவை அகற்று