ஆத்திசூடி (Aathichudi), 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை ஆத்திசூடி உணர்த்துகிறது.

ககர வருக்கம் - விளக்கவுரை

32) க : கடிவது மற

பொருள்: யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

English Translation: Forget the habit of scolding

English Meaning: Do not scold anyone, as harsh words can hurt and damage relationships. Instead, practice patience and understanding in your interactions. So, forget the habit of scolding.

33) கா : காப்பது விரதம்

பொருள்: காப்பது என்பது, உயிர்களுக்கு தீங்கு செய்யாமல் அவற்றை காப்பாற்றுவதே; பிற உயிர்களுக்கு துன்பம் தராமல் அவற்றை பாதுகாப்பது அறம் ஆகும். இத்தகைய அறத்தை தொடர்ச்சியாக பின்பற்றுவதே விரதம் (நோன்பு) ஆகும்.

English Translation: Preservation is equal to fasting.

English Meaning: Preservation involves protecting life without causing harm, and safeguarding others from suffering is a virtuous act. Continuously following such virtuous practices is equivalent to fasting, as it requires self-discipline and dedication.

34) கி : கிழமைப்பட வாழ்

பொருள்: உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்

English Translation: Live according to days.

English Meaning: Live in a way that benefits others through your actions and resources, using your body and possessions for the greater good. Your life should be lived with purpose and service to others, in harmony with the time and circumstances.

35) கீ : கீழ்மை அகற்று

பொருள்: இழிவான குணஞ் செயல்களை நீக்கு

English Translation: Remove the lowliness

English Meaning: Eliminate degrading habits and actions, and remove any tendencies towards lowliness. Strive to cultivate virtuous qualities and maintain integrity in all aspects of life.

36) கு : குணமது கைவிடேல்

பொருள்: நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைப் பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

English Translation: Don't lose character.

English Meaning: Never stop following virtuous qualities that lead to goodness. Maintaining good character is essential, and one should always strive to uphold it.

37) கூ : கூடிப் பிரியேல்

பொருள்: நல்லவரோடு நட்பு செய்து பின் அவரைப் பிரியாதே

English Translation: Don't forsake friends.

English Meaning: Do not forsake friends. Befriend good people and never part ways with them.

38) கெ : கெடுப்பது ஒழி

பொருள்: பிறருக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே.

English Translation: Abandon animosity.

English Meaning: Do not engage in actions that cause harm to others. Let go of any animosity and strive for harmony.

39) கே : கேள்வி முயல்

பொருள்: கற்றறிந்தவர்களிடம் இருந்து அறிவைப் பெற, அவர்கள் கூறும் அறிவுரைகளை கவனமாக கவனித்து, கேள்விகள் கேட்டு, கற்றுக் கொள்

English Translation: Learn by asking questions

English Meaning: Make an effort to ask those who are knowledgeable and learn from the valuable insights they share

40) கை : கைவினை கரவேல்

பொருள்: உங்களுக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

English Translation: Learn handicraft

English Meaning: Learn and practice the handicraft you know, without hiding it from others, and share your skills with them.

41) கொ : கொள்ளை விரும்பேல்

பொருள்: பிறர் பொருளைத் திருடுவதற்கு ஆசைப்படாதே.

English Translation: Don't swindle.

English Meaning: Do not have the intention of taking what belongs to others through dishonest means. Respect others' property and live with integrity, avoiding any form of theft or deceit.

42) கோ : கோதாட்டு ஒழி

பொருள்: குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)

English Translation: Ban hurtful games.

English Meaning: Abandon harmful games that cause harm or distress. Avoid engaging in activities that promote negativity or wrongdoing.

43) கெள : கெளவை அகற்று

பொருள்: வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

English Translation: Avoid gossiping.

English Meaning: Eliminate the artificial suffering that arises in life, such as through gossiping or unnecessary conflicts, and focus on fostering peace and understanding.