ஆத்திசூடி (Aathichudi), 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை ஆத்திசூடி உணர்த்துகிறது.

உயிர்மெய் வருக்கம் - பாடல்கள்

14) க : கண்டொன்று சொல்லேல்
15) ங : ஙப் போல் வளை
16) ச : சனி நீராடு
17) ஞ : ஞயம்பட உரை
18) ட : இடம்பட வீடு எடேல்
19) ண : இணக்கம் அறிந்து இணங்கு
20) த : தந்தை தாய்ப் பேண்
21) ந : நன்றி மறவேல்
22) ப : பருவத்தே பயிர் செய்
23) ம : மண் பறித்து உண்ணேல்
24) ய : இயல்பு அலாதன செய்யேல்
25) ர : அரவம் ஆட்டேல்
26) ல : இலவம் பஞ்சில் துயில்
27) வ : வஞ்சகம் பேசேல்
28) ழ : அழகு அலாதன செய்யேல்
29) ள : இளமையில் கல்
30) ற : அறனை மறவேல்
31) ன : அனந்தல் ஆடேல்