14) க : கண்டொன்று சொல்லேல்
பொருள்: கண்ணால் கண்டதை உண்மையாகச் சொல்லாமல், அதைப் பற்றி வேறு ஒன்றாகச் சொல்லக்கூடாது.
English Translation: Do not see one thing and say another.
English Meaning: One must not speak of something differently from how it is seen with their own eyes. It is essential to convey the truth as it is observed.
15) ங : ஙப் போல் வளை
பொருள்: 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துகளைத் தழுவுகிறதோ
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களைக் காக்க வேண்டும்.
English Translation: Bend like the Tamil letter ங.
English Meaning: Just as the letter 'ங' serves its purpose by harmonizing with the letters in its series without seeking individual recognition, we too should protect and support those connected to us without expecting any benefit in return.
16) ச : சனி நீராடு
பொருள்: சனி என்றால் 'குளிர்ச்சி' என்று பொருளில் இந்த ஆத்திசூடி கையாளப்படுகிறது. உடம்பில் உள்ள வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியாக இருக்க தினமும் நீராட வேண்டும் என்பதையே இது குறிப்பிடுகிறது. சனிக்கிழமையன்று எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் என்ற பழக்கம் நம் தமிழ் மரபில் உண்டு.
English Translation: Ablute on Saturdays.
English Meaning: The word "Sani" is used in the Aathichudi to signify "coolness," emphasizing the importance of daily bathing to reduce body heat and maintain calmness. Tamil tradition also includes the practice of oil bathing on Saturdays, symbolizing purification and relaxation.
17) ஞ : ஞயம்பட உரை
பொருள்: கேட்பவருக்கு இன்பம் உண்டாகும்படி இனிமையாகப் பேசு.
English Translation: Sweeten your speech.
English Meaning: Speak with kindness and warmth, ensuring your words bring happiness and comfort to the listener. Let your speech reflect positivity and create a pleasant atmosphere.
18) ட : இடம்பட வீடு எடேல்
பொருள்: உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாகக் கட்டாதே.
English Translation: Judiciously size your home
English Meaning: Do not build a house larger than what you need, as simplicity and practicality lead to a more content and balanced life.
19) ண : இணக்கம் அறிந்து இணங்கு
பொருள்: ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன், அவர் நல்ல குணங்களும், நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
English Translation: Befriend the best.
English Meaning: Before forming a friendship with someone, ensure they possess good qualities and engage in virtuous actions, and only then build a relationship with them.
20) த : தந்தை தாய்ப் பேண்
பொருள்: உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.
English Translation: Protect your parents.
English Meaning: Take care of your father and mother with love and support throughout their old age.
21) ந : நன்றி மறவேல்
பொருள்: ஒருவர் உனக்குச் செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
English Translation: Don't forget gratitude.
English Meaning: Always remember and be grateful for the help someone has offered you, as gratitude strengthens relationships and reflects true character.
22) ப : பருவத்தே பயிர் செய்
பொருள்: எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
English Translation: Sow during the season.
English Meaning: Every task should be done at the appropriate time, just as seeds must be sown in their proper season to ensure a fruitful harvest.
23) ம : மண் பறித்து உண்ணேல்
பொருள்: பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே
English Translation: Don't grab others land.
English Meaning: Do not seize others' land to make a living, as honesty and integrity are the foundations of a righteous life.
24) ய : இயல்பு அலாதன செய்யேல்
பொருள்: நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
English Translation: Desist demeaning deeds.
English Meaning: Avoid actions that are contrary to good morals, as they diminish your character and harm your integrity. Strive to uphold virtuous behavior in all aspects of life.
25) ர : அரவம் ஆட்டேல்
பொருள்: பாம்புகளைப் பிடித்து விளையாடாதே.
English Translation: Don't play with snakes.
English Meaning: Do not play with snakes, as it is both dangerous and unwise to invite harm through reckless actions.
26) ல : இலவம் பஞ்சில் துயில்
பொருள்: 'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
English Translation: Sleep on a silk-cotton mattress.
English Meaning: Sleep on a silk-cotton mattress, a bedding made from the soft fibers of the silk-cotton tree, symbolizing comfort and quality rest. This emphasizes the importance of choosing a peaceful and soothing environment for a good night's sleep.
27) வ : வஞ்சகம் பேசேல்
பொருள்: உண்மைக்கு மாறானதும், கவர்ச்சியானதும் ஆகிய சொற்களைத் தன்னலம் கருதிப் பேசாதே.
English Translation: Don't wile
English Meaning: Do not speak words that are false or overly alluring with selfish intent. Honesty and sincerity should guide your speech.
28) ழ : அழகு அலாதன செய்யேல்
பொருள்: அழகற்ற செயல்களை செய்யாதே. இங்கு 'அழகற்ற' என்பது, பிறர் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்காத அல்லது துயரம் ஏற்படுத்தக்கூடிய செயல்களைக் குறிக்கிறது. அத்தகைய துயரம் தரும் செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
English Translation: Do not do ugly deeds.
English Meaning: Do not commit ugly deeds. Here, "ugly" refers to actions that do not bring happiness or cause distress to others. Such harmful actions should always be avoided.
29) ள : இளமையில் கல்
பொருள்: இளமையிலேயே கல்வியை முதன்மையாகக் கொள்ள வேண்டும். கல்வி என்பது வெறும் பொருள் ஈட்டுவதற்காக அல்ல, நற்பண்புகளுடன் வாழ்வதற்கான வழிகாட்டியாகவும் அமைய வேண்டும். இளமையில் பெற்ற கல்வி தனிநபருக்கும் சமுதாயத்திற்கும் உயர்ந்த நன்மைகளை வழங்கும்.
English Translation: Learn in youth
English Meaning: Education should be prioritized during youth, as it is not merely a tool for earning wealth but a guide to leading a virtuous life. Education gained in youth brings immense benefits to both the individual and society.
30) ற : அறனை மறவேல்
பொருள்: அறத்தினை மறவாமல், எந்த நேரத்திலும், எந்த சூழலிலும் அறநெறியை விட்டுமாறாமல் செயல்பட்டு, நற்பண்புகளுடன் வாழ வேண்டும்.
English Translation: Do not forget righteousness.
English Meaning: One should never forget righteousness and must always act in accordance with virtuous principles, regardless of time or circumstances. Living with integrity and good character is essential.
31) ன : அனந்தல் ஆடேல்
பொருள்: மிகுதியாகத் துங்காதே என்று பொருள் தருகிறது. அளவுக்கு அதிகமாக சாப்பிடாதே அல்லது உடலைக் குறைக்காமல் தூங்காதே என்பதாகவும் புரிந்து கொள்ளலாம். இது நம்மை உணவு, உறக்கம் ஆகியவற்றில் மிதத்தை கடைப்பிடிக்கச் செய்யும் ஒரு அறிவுரை. அதிகம் சாப்பிடுவது உடல்நலனுக்கும், கூடுதலாக உறங்குவது செயல்திறனுக்கும் கேடு விளைவிக்கும் என்பதால், அளவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
English Translation: Oversleeping is obnoxious.
English Meaning: Oversleeping disrupts the body's natural balance, leading to lethargy, reduced productivity, and potential health issues. Maintaining a proper sleep schedule is key to overall well-being.