ஆத்திசூடி (Aathichudi), 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை ஆத்திசூடி உணர்த்துகிறது.

உயிர் வருக்கம் - பாடல்கள்

1) அ : அறம் செய்ய விரும்பு
2) ஆ : ஆறுவது சினம்
3) இ : இயல்வது கரவேல்
4) ஈ : ஈவது விலக்கேல்
5) உ : உடையது விளம்பேல்
6) ஊ : ஊக்கமது கைவிடேல்
7) எ : எண் எழுத்து இகழேல்
8) ஏ : ஏற்பது இகழ்ச்சி
9) ஐ : ஐயமிட்டு உண்
10) ஒ : ஒப்புரவு ஒழுகு
11) ஓ : ஓதுவது ஒழியேல்
12) ஒள : ஒளவியம் பேசேல்
13) ஃ : அஃகம் சுருக்கேல்