1) அ : அறம் செய்ய விரும்பு
பொருள்: நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.
English Translation: Intend to do the right deeds.
English Meaning: To perform good deeds, the mind must be willing. When the mind is willing, those good deeds can be done with joy.
2) ஆ : ஆறுவது சினம்
பொருள்: கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சி வசப்பட்டுத் தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அஃது எல்லோருக்கும் நல்லது அல்ல. அதனால் கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
English Translation: The nature of anger is to subside.
English Meaning: When anger arises, our ability to think rationally diminishes, and emotions take over, creating a situation where wrong decisions might be made. This is not beneficial for anyone, which is why anger must be controlled and subdued.
3) இ : இயல்வது கரவேல்
பொருள்: உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை கேட்பவருக்கு கொடுக்காமல் இருக்க கூடாது
English Translation: Help others as much as you can.
English Meaning: You should not withhold something you are capable of giving from someone who asks for it, as generosity is a virtue that benefits both the giver and the receiver.
4) ஈ : ஈவது விலக்கேல்
பொருள்: ஒருவர், மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
English Translation: Do not stop or avoid charitable deeds.
English Meaning: Do not prevent someone from giving to another, as such actions hinder generosity and the goodwill that fosters harmony and support among people.
5) உ : உடையது விளம்பேல்
பொருள்: உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளைப் பலரும் அறியும்படி பெருமையாகப் பேசாதே.
English Translation: Do not brag about your possessions.
English Meaning: Do not boast about your possessions and qualities to make others aware of them, as humility earns respect, while pride often alienates others.
6) ஊ : ஊக்கமது கைவிடேல்
பொருள்: எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
English Translation: Never lose hope or motivation.
English Meaning: One should never abandon effort, as persistence and determination are the keys to overcoming challenges and achieving success, even in the face of difficulties and setbacks.
7) எ : எண் எழுத்து இகழேல்
பொருள்: எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
English Translation: Do not despise numbers and letters.
English Meaning: Numbers and letters are essential to people; therefore, do not dismiss them as insignificant or neglect to learn and appreciate their value, as they form the foundation of knowledge, communication, and the understanding of the world around us.
8) ஏ : ஏற்பது இகழ்ச்சி
பொருள்: இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
English Translation: Do not beg.
English Meaning: Living by begging is demeaning; therefore, one should avoid resorting to asking for alms.
9) ஐ : ஐயமிட்டு உண்
பொருள்: யாசிப்பவர்கட்குக் கொடுத்துப் பிறகு உண்ண வேண்டும்.
English Translation: Eat after offering alms.
English Meaning: You should eat only after giving to those who are in need, as sharing with others reflects compassion and selflessness.
10) ஒ : ஒப்புரவு ஒழுகு
பொருள்: உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
English Translation: Adapt to your changing world.
English Meaning: Understand the changing dynamics of the world and adapt your actions accordingly, as flexibility and resilience are key to thriving in an ever-evolving environment.
11) ஓ : ஓதுவது ஒழியேல்
பொருள்: நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு. கற்றுக்கொள்வதை நிறுத்தாதே.
English Translation: Never stop learning.
English Meaning: Always immerse yourself in reading good books and never stop learning, as continuous knowledge enriches the mind and shapes a better future.
12) ஒள : ஒளவியம் பேசேல்
பொருள்: ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
English Translation: Do not speak with envy.
English Meaning: Do not speak with envy toward anyone, as jealousy clouds judgment and hinders the growth of genuine relationships.
13) ஃ : அஃகம் சுருக்கேல்
பொருள்: அதிக இலாபத்துக்காகத் தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.
English Translation: Do not reduce the measure of grains.
English Meaning: Do not reduce the quantity of grains while measuring to sell for the sake of gaining excessive profit, as such actions not only betray trust but also undermine the principles of honesty and fairness in trade.