குறள் 984
பொருட்பால் (Wealth) - சான்றாண்மை (Perfectness)
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு.
பொருள்: தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
Not to kill is penance pure Not to slander virtue sure.
English Meaning: Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.