குறள் 937

பொருட்பால் (Wealth) - சூது (Gambling)

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

பொருள்: சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

If men their time in game-den spend
Ancestral wealth and virtues end.

English Meaning: To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.